யாழ்ப்பாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள பெயர் பலகைகள்!

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணத்தில் வீதிகள் மற்றும் முக்கிய அரச திணைக்களங்களின் பெயர் பலகையில் சிங்கள மொழி தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவற்றை திருத்தியமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாணகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர் பலகையினை மாற்றுவதற்கு வடக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பெயர் பலகையில் சிங்கள மொழி தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவில் சரி செய்ய வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.