மாவீரர் நாளுக்கான அறைகூவல் விடுக்கும் மாவடிமுன்மாரி பிரதேச மக்கள்

Report Print Nesan Nesan in சமூகம்

மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்ப கட்ட துயிலுமில்லங்களின் சிரமதானப் பணி முன்னாள் போராளிகளினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவடி முன்மாரி, பனிச்சையடி முன்மாரி ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்கள், தேசத்தின் வேர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் இணைந்து இதில் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் மட்டுமே பல ரூபா செலவில் செய்து வந்தனர்,

அதன்பிரகாரம் ஒக்ஸ் போட் பல்கலைக்கழகத்தில் பல நிகழ்வுகள் நடைபெற்று வந்ததாக சிரமதானப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, பல இலட்சம் ரூபா செலவுகளில் புலத்தில் மாவீரர் தினங்களை குறைத்து வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிப்பதற்கு உறுதுணையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றும் மாவடிமுன்மாரி துயிலுமில்ல பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.