இலங்கை படையினரின் 69ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் இன்று முல்லைத்தீவு ஊற்றங்கரை ஆலயத்தில் கொடிவணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் 38 இராணுவப் பிரிவுகளின் தளபதிகளின் கொடி அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரால் ராஜகுருவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.