பொலிஸ் உத்தியோகத்தருக்கு எமனாக வந்த யானை

Report Print Steephen Steephen in சமூகம்

யாழ் - கண்டி, ஏ 9 வீதியின் ஞானிக்குளம் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, யானை மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்தில் இருந்து கெக்கிராவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் குறுக்காக நடந்து சென்ற காட்டு யானை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், மரத்ன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

திரப்பனை, உலகல்ல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் திரப்பனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.