இலங்கை வந்த பிரித்தானிய தம்பதிக்கு கிடைத்த அதிர்ச்சி! மனைவியின் கண் முன்னே நடந்த சோகம்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் நோக்கில் வந்த பிரித்தானிய தம்பதி அதிர்ச்சியான சம்பவம் ஒன்றிற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

இலங்கை வந்த தம்பதி கடலில் குளித்து கொண்டிருந்த போது மனைவி கண் முன்னால் கணவன் மிகப்பெரிய அலை ஒன்றில் சிக்கிய இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

Halfords in Llandudno என்ற நிறுவனத்தின் முகாமையாளரான Andy Critchett என்பவர் கடந்த வியாழக்கிழமை கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தனது நண்பர் மற்றும் மனைவியுடன் கடல் நீரில் விளையாடிய போது எதிர்பாராத விதமாக பாரிய அலை ஒன்று அவரை இழுத்து சென்றுள்ளது.

எனினும் நண்பர் மற்றும் மனைவி எவ்வளவு முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

23 வருடங்கள் இணைந்து வாழ்ந்த குடும்ப வாழ்க்கையை இந்த கடல் அலை, தனது கண்களுக்கு முன்னாலேயே முடிவுக்கு கொண்டு வந்ததாக உயிரிழந்தவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

உயிர் காப்பாற்றும் பொருட்கள் ஒன்றையும் தம்மால் இலங்கை கடலில் அவதானிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

கணவரின் 50 வது பிறந்த நாளை இலங்கையில் கொண்டாடுவதற்காக பல விதமாக திட்டங்களை மேற்கொண்டு சென்றோம்.

எனினும் இறுதியில் இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கும் என தான் ஒரு போதும் நினைக்கவில்லை எனது உலகமே எனது கணவர் தான் என மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.