சிங்கள நடிகையை கடுமையாக எச்சரித்த பொலிஸார்

Report Print Manju in சமூகம்

இணையத்தளத்தில் நிர்வாணப் படங்கள் தொடர்பான சர்ச்சையில் அவ்வப்போது சிக்கும் சிங்கள நடிகையான அனோமா ஜனாதரி கறுவாத்தோட்டை பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற திரைப்பட கண்காட்சியின் முடிவில் விருது வென்ற திரைப்பட இயக்குரைத் தாக்க முயற்சி செய்ததாக கறுவா தோட்டபொலிஸ் நிலையத்தில் அந்த இயக்குனரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்மைய பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டபோது அவர் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போதே அனோமாவுக்கு பொலிஸார் கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

நடிகை அனோமா ஜனாதரி දැවෙන විහඟුන් என்ற திரைப்படத்தின் இயக்குனர் சஞ்சீவ புஷ்பகுமாவை தவறான வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்தாக தெரிவிக்கப்படுகிறது.

அனோமா, தான் நடித்த திரைப்படத்திற்கு தருவதாக கூறிய பணம் தரவில்லை என குற்றம்சாட்டி திரைப்படக் கழகத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியின் முடிவில் கெட்ட வார்த்தைகளை கூறி அவரைத்தாக்க முற்பட்டுள்ளார்.

அவரது நடத்தை அங்கிருந்த அனைவரையும் வெறுப்புக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனோமா ஜனாதரி தான் நடிப்பதற்காக ஒப்புக்கொண்ட படத்திற்காக மூன்றில் இரண்டு பங்கு பணத்தை அதாவது, ஒரு லட்சம் ரூபாவை ஏற்கனவே பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக திரைப்பட முடிவிலே முழுத்தொகையும் செலுத்தப்படுகின்ற நிலையில் அவரது வலுவான கோரிக்கையின் பேரில் திரைப்பட இயக்குனரால் இந்தத் தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் இந்தப்படத்தில் நடிப்பதற்கு ரூ 15 லட்சம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தொடங்க முதலாவதாக, 225,000 ரூபாய் அனோமாவுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிவில் 150,000 ரூபா கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும். செப்டம்பர் 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 372989 என்ற கணக்கிற்கு மக்கள் வங்கியிலிருந்து ரூ .625,000 வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிப்பதற்கு ஒப்புக்கொண்டபின்னர் அனோமா விருப்பமின்மயை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அனோமா ஜனாதரிக்கு எதிராக இயக்குனர் சஞ்சீவ புஷ்பகுமார சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.