இலங்கையில் தரையிறக்கிய இராட்சத விமானம்!

Report Print Vethu Vethu in சமூகம்

உலகின் இரண்டாவாது மிகப்பெரிய விமான ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

என்டனோ AN 124 விமானம் மத்தல விமான நிலையத்தில் இன்று பிற்பகல் 12.20 மணியளவில் தரையிறங்கியுள்ளது.

சவுதி அரேபியாவின் Prince Sultan விமான நிலையத்தில் இருந்து இந்தோனேசியா வரை பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

19 ஊழியர்களுடன் பயணித்த விமானம் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காகவும் ஓய்வு பெற்றுக் கொள்வதற்காகவும் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 3.30 மணியளவில், மீண்டும் இந்த விமானம் இந்தோனேசியா நோக்கி பயணிக்கவுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.