ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவினை கொள்ளையிட்டுச் சென்ற நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவினை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார்.

இடிமன், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நபர் ஒருவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருப்பதை அறிந்து அவரை பின் தொடர்ந்து சென்று குறித்த சந்தேக நபர் அபகரித்து சென்றுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவரை பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers