கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட அபாயகரமான வெடிகுண்டுகள் அழிப்பு!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாக கிணறு ஒன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

பிரதேச சபை கிணறு ஒன்றை துப்பரவு செய்யும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டபோது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆபத்தான வெடிபொருட்கள் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு பிரதேச சபை அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியதை தொடர்ந்து இன்று விசேட அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டு அழித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட 9 எரிகனைகள் ஆனந்தபுரப்பகுதியில் வைத்து பாதுகாப்பான முறையில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.