இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள அமெரிக்கர்

Report Print Vethu Vethu in சமூகம்

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த அமெரிக்க பிரஜைக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசா அனுமதி பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமெரிக்க நாட்டவர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்ந தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றத்தை ஏற்றுக்கொண்டமை மற்றும் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுகள் எதுவும் குறித்த நபர் மீது இல்லாமையினால் அவருக்கான 6 மாத சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 50000 அபராதம் விதித்த நீதவான குறித்த இளைஞரை நாடு கடத்துவதற்காக மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளியான இளைஞர் அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் நாட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது..

Latest Offers

loading...