கொழும்பு வாழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள மர்ம கும்பல்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் வாகனங்களின் கண்ணாடியை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்ஸ, மொரட்டுவ, தெஹிவளை, பொரலஸ்கமுவ, மிரிஹான, கொஹுவளை, மஹரகம மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் இரண்டு பக்க கண்ணாடிகளை இரவில் திருடும் நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் திருடிய பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொரலஸ்கமுவை மற்றும் கிரிவத்துடுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

அவ்வாறு திருடும் கண்ணாடிகளை 500 - 1500 ரூபாய் விலையில் இவர்கள் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வரையில் 67 வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது. 50 வாகனங்களை சேர்ந்த 25 லட்சம் ரூபாய் பெறுமதியான வாகன கண்ணாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுளள்ளதாக மிரிஹான விசேட குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.