கொழும்பிலிருந்து சென்ற வாகனம் விபத்து: யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் பலி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மரியதாஸ் நிறோசன் என்ற நபரே உயிரிழந்துள்ளதுடன், செ.அயந்தன் எனும் நபரின் கையொன்று துண்டிக்கப்பட்டுள்ளது.

புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிய உழவு இயந்திரம் தரித்து நின்றுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் இருந்து யாழ். நோக்கி தண்ணீர் போத்தல்கள் ஏற்றி சென்ற குளிரூட்டப்பட்ட வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை மோதியுள்ளது.

குறித்த விபத்தில் தண்ணீர் போத்தல்கள் ஏற்றி சென்ற வாகனத்தில் பயணம் செய்த யாழ்பாணத்தை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers