வத்தளை அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் வாணிவிழா

Report Print Akkash in சமூகம்

மாபோல- வத்தளை, அல் அஷ்ரப் மகா வித்தியாலயம் இந்து மாணவர்களின் ஏற்பாட்டில் 2018 ஆண்டிற்கான வாணிவிழா நேற்று நடைபெற்றுள்ளது.

வத்தளை மாநகரசபை மண்டபத்தில் நேற்று மாலை விழாவிற்கான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

தமிழ் மாணவர்களுக்கென்று, பாடசாலை இல்லாத காரணத்தினால் வேறு ஒரு இடத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த விழா பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.இர்ஷாத் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், சிறப்பு விருந்தினராக ஐக்கிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் எஸ்.சசிகுமார் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மாணவர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பும் நடைபெற்றிருந்தது.

இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers