ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் இம்தியாஸ் காதர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை, பொலஹெல்ல பிரதேசத்தில் உள்ள காதரின் வீட்டில் இருந்து சில துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதன் காரணமாகவே அவரை இன்று அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குறித்த நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சோதனையின் போது, எம்.பி.எஸ். துப்பாக்கி, ரி 56 ரக துப்பாக்கி, ரிஜீட்டர் ரக துப்பாக்கி என்பவற்றை தாம் கைப்பற்றியதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு தொகை தோட்டாக்களையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இம்தியாஸ் காதர் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers