மட்டக்களப்பில் நவராத்திரி விழாவிற்கு தடை விதித்த அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பில் தாதிய கல்லூரி மாணவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய மாணவர்களுக்கு நவராத்திரி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டமையை கண்டித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடி சுகாதார அமைச்சின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு போதனாசிரியரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட போதனாசிரியர் கொழும்பிற்கு மாற்றம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...