நீ போற கெசினோ - நாங்க உனக்கு மெசினோ? பொங்கி எழுந்த தொழிலாளர்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் இன்றும் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தலவாக்கலை - வட்டகொடை மேற்பிரிவு, கீழ்பிரிவு, ஒக்ஸ்போட், மடக்கும்புர, மேற்பிரிவு, கீழ்பிரிவு, புதுகாடு, நடுபிரிவு, வடக்கிமலை, சின்ன கணக்கு, சவூத் மடக்கும்புர ஆகிய பகுதிகளில் காலை 10.00 மணியளவில் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தோட்டப் பகுதிகளிலிருந்து கருப்பு கொடிகளை ஏந்தியும், சுலோகங்களை ஏந்தியும், கொடும்பாவியை தூக்கிக்கொண்டும், கொடும்பாவியை செருப்பால் அடித்தும் ஊர்வலமாக தோட்டத்தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.

“நீ போற கெசினோ - நாங்க உனக்கு மெசினோ” என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டகொடை நகர வர்த்தகர்கள் அனைத்து கடைகளையும் அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளதோடு, சாரதி சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியின் வட்டகொடை நகரத்தில் வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கொடும்பாவியை அடித்து உதைத்துள்ளதோடு ஒப்பாரி வைத்து தீ வைத்து எறித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000ற்கும் அதிகமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers