வெளிநாட்டில் தாய்! மாமனுக்கு பயந்து காட்டில் ஒழிந்த சிறுமி

Report Print Steephen Steephen in சமூகம்

பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்த 14 வயதான சிறுமியை அவரது மாமன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை உயிரிழந்த பின்னர், தாய் வெளிநாடு சென்றுள்ளதுடன் சிறுமி பாட்டியின் பாதுகாப்பில் அவரது வீட்டில் வசித்து வந்த போது இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளார்.

வீட்டில் மூத்த பிள்ளையான சிறுமிக்கு தங்கை ஒருவரும் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்த சந்தேக நபரான மாமன் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு பருவமடைந்த பின்னரும் சந்தேக நபர், தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

37 வயதான சந்தேக நபர் கொழும்பில் தொழில் புரிந்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்னர் சந்தேக நபர் வீட்டுக்கு வந்துள்ளதுடன் அவருக்கு பயந்து சிறுமிகள் காட்டில் ஒழிந்து இருந்தவாறு பொலிஸ் அவசர இலக்கமான 119 இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சிறுமிகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் உத்தரவின் பேரில் பொலிஸார், சிறுமிகளை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தே நபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலியகரா மற்றும் பதுளை பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய பதுளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers