குருணாகலில் பிறந்து சில நாட்களேயான சிசு மீட்பு

Report Print Mubarak in சமூகம்

குருணாகலில் பிறந்து சில நாட்களேயான நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் சுற்றுவட்டத்திற்கு அண்மையில், இன்று காலை குறித்த சிசுவை கண்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர்.

சிசு தற்போது குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிசுவை கைவிட்டு சென்ற நபரை தேடும் முயற்சியில் குருணாகல் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.