குடி நீர் இல்லாமல் அவதியுறும் பெண்ணொருவர் தண்ணீர் எடுக்கும் பாத்திரங்களுடன் வீதியில் நின்று போராட்டம் நடத்தியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
சேனாபதியெ ஆனந்த என்ற பிக்குவின் பேஸ்புக் பக்கத்திலே இது தொடர்பாக தகவல் பகிரப்பட்டுள்ளது.
நுவரகலதன்னே என்ற வீதியலே குறித்த பெண், பல தண்ணீர் பாத்திரங்களை வீதிக்கு குறுக்காக அடுக்கி வைத்து தரையில் தூங்கியதாக தெரிவித்துள்ளார்.
“கண்டிக்குச் செல்லும்போது இந்த உதவியற்ற அம்மா குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் நுவரகலதன்னே என்ற வீதியிலே தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
நான் ஆயிரம் ரூபாய் பணமும் மற்றுமொரு பிக்குவிடம் ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று அவரிடம் கொடுத்தேன். அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கிறார்கள்.” என குறித்த பிக்கு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.