கொழும்பில் ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்த நபர் கைது

Report Print Manju in சமூகம்

இராஜகிரியவில் பல ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்த நபர் ஒருவர் வெலிக்கடை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடம்பர வீடுகளில் உள்ள பெண்களுடன் சட்டவிரோத தொடர்புகளை ஏற்படுத்தும் குறித்த நபர், அங்கிருக்கும் மற்றைய வீடுகளில் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொள்ளையடித்த பணத்தை இரவில் கசினோ விளையாட்டுக்களில் ஈடுபட செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலகேயின் ஆலோசனையின் படியே இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...