திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 25 தாதிமார்கள் நியமனம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 25 தாதியர்களை நியமிப்பதற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரதி அமைச்சர் அண்மையில் குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்கு காணப்படுகின்ற குறைபாடுகள் பற்றி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியரான அனுஷ்யா ராஜ்மோகனிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

வைத்தியசாலையின் குறைபாடுகளில் தாதிமார்களின் தட்டுப்பாடு மிக முக்கியமானதாக காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பணிப்பாளர், “தினமும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் செல்வதாகவும் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதாலும் தாதிமார்கள் அதிகம் தேவைப்படுகின்றனர் என்றும் தற்போது இருக்கின்ற குறைந்த எண்ணிக்கையிலான தாதிமார்களைக் கொண்டு சேவையை வழங்குவது சிரமாக இருக்கின்றது” என்று பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த பிரதி அமைச்சர் அதற்கான நடவடிக்கையை தற்போது மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையின்போது 25 தாதிமார்களை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பைசல் காசிம் சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Latest Offers

loading...