சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை விவகாரம்! அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு

Report Print Manju in சமூகம்

கடற்கரையில் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளைப் பற்றி ஹபராதுவ சமூக பொலிஸ் பிரிவினால் நிறுவப்பட்ட விளம்பர பலகையை உடனடியாக நீக்குமாறு பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் சட்ட அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“சிறிது நேரதிற்கு முன்பு தான் , நான் அதைப் பற்றி கேள்விப்பட்டேன். உடனடியாக அதை நீக்குமாறு அறிவித்தேன்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கலாசாரத்தின்படிபொருத்தமான ஆடையை அணியுமாறு ஹபராதுவ சமூக பொலிஸ் பிரிவால் அறிவிப்பு பலகையொன்று நிறுவப்பட்டுள்ளது.

அதில் குளியல் ஆடையினை அணிந்த வெளிநாட்டு பெண்களின் படங்களை கொண்ட விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய பொருத்தமற்ற ஆடைகளை அணியவேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விளம்பரம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

ஆடைகள் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பின்பற்றப்படும் கடுமையான சட்டங்களை ஹபராதுவ சமூக பொலிஸ் பிரிவால் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிப்பதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Latest Offers