தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! வவுனியாவில் சம்பவம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டு அறைக்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கற்குளம், சிதம்பரபுரம் பகுதியில் வசித்த வந்த மாணிக்கம் ஜெகதீஸ்வரன் என்ற 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் இன்று மாலை வீட்டு அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

கணவனை நீண்ட நேரமாக காணவில்லையென மனைவி தேடியலைந்த பின்னர் வீட்டு அறையின் கதவை திறந்து பார்த்த போது வீட்டு அறையினுள்ளே கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து சென்றுள்ளனர்.

குறித்த நபர் குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Latest Offers