ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தலைகுனிய வைத்த வெளிநாட்டு யுவதி!

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டு யுவதி ஒருவரின் செயற்பாடு காரணமாக இலங்கையர் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலுள்ள ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த குப்பைகளை, வெளிநாடு யுவதி ஒருவர் தனியாக துப்பரவு செய்து வருகிறார்.

இலங்கையர்கள் பொறுப்பற்ற வகையில், குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதன் மூலம் சூழலைக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.

இந்நிலையில், வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர், நாட்டின் அழகை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தலை குனிய வைத்துள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி பதிவுகள் இடப்பட்டுள்ளன.

“அக்கறை இல்லாத இலங்கையர்களுக்கு மத்தியில் இலங்கையின் அழகை பாதுகாப்பதற்கு கஷ்டப்படும் இந்த வெளிநாட்டு பெண்ணை பார்க்கும் போது உண்மையாகவே கவலையாக உள்ளது. ஏன் இலங்கையர்கள் இப்படி கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுகின்றார்கள்?” என குறிப்பிட்டு பேஸ்புக்கில் பலர் இந்த புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளனர்.