தமிழ்மக்களின் புராதான அடையாளங்களை பாதுகாக்கும் திட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்

தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் யாழ்ப்பாணம் நல்லூர்க் கோவிலுக்கு அருகாமையில் “மரபுரிமை மையம்” இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து மரபுரிமை மையத்தை திறந்து வைத்துள்ளனர்.

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசார விழுமியங்கள் என்பன பல்வேறு தரப்பினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன் அருகி வருகின்றது.

இந்த நிலையில் எஞ்சிய புராதான அடையாளங்களை பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்கு இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்கள் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதது.