பிரதான வீதிக்கு பதிலாக மாற்று வீதி அமைக்க களமிறங்கியுள்ள முப்படையினர்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின், நியூவெளிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை அடுத்து, இராணுவத்தின் உதவியுடன் குறுக்கு வீதியொன்றை அமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினர் முன்வந்துள்ளனர்.

தேயிலை தோட்டமொன்றின் ஊடாக இந்த குறுக்கு வீதி நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த குறுக்கு வீதியை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், இராணுவத்தினரின் உதவியுடன் இந்த குறுக்கு வீதியின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இன்றையதினம் நோர்வூட் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது, முப்படை அதிகாரிகள், நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர், அம்பகமுவ பிரதேச சபை செயலாளர், தேயிலை தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை தோட்டத்தின் ஊடாக மிக நீண்ட தூரம் பயணிகள் தற்போது நடந்து தமது தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கின்றமையை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...