தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் கேசவன் பஹ்ரைன் பயணம்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவருமான ஸ்ரீகரன் கேசவன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முதலாவது சர்வதேச இளைஞர் மாநாட்டிற்கு பங்குகொள்வதற்காக பஹ்ரைன் நாட்டிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி பயணமாகவுள்ளார்.

குறித்த மாநாடு 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பஹ்ரைன் நாட்டில் நடைபெற இருக்கின்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் மூலம் தெரிவுசெய்யப்பட்டு இலங்கை நாட்டை பிரதிநிதித்துப்படுத்தி மாநாட்டில் பங்குகொள்ளும் இளைஞர் யுவதிகளில் இவர் ஒருவரே தமிழ் இளைஞர் ஆவார்.

குறித்த இளைஞர் வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக இறுதியாண்டு முகாமைத்துவப் பீட மாணவரும், வட மாகாண சுற்றுலா பணியகத்தின் பட்டப்படிப்பு பயிலுனர் மாணவருமாவர்.

2016ம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் சார்ஜாவில் நடைபெற்ற 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று இலங்கை நாட்டின் பிரதிநிதியாக பங்குபற்றிய ஜனாதிபதி சாரணர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers