ஆயிரம் ரூபாவிற்காக போராடும் தோட்ட தொழிலாளர்கள்! நேசகரம் நீட்டும் யாழ். மக்கள்

Report Print Murali Murali in சமூகம்

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இருநூறு ஆண்டு கால வரலாற்றை கொண்ட மலையக மக்கள் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். எனினும், அந்த மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கின்றது.

இதனால், ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர்களும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் எதிர்வரும் 21ம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது.

தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கில் இருந்து உரிமைக் குரல் கொடுக்கும் நோக்கில் சமூக வலைத்தள நண்பர்களினால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers