நபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை பகுதியில் வீடுகளில் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்தநிலையில் இம்மாதம் 31ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருகோணமலை, பாலையூற்று, திருகோணமலை நகரம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த நபருக்கெதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்குகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே பொலிஸார் சந்தேக நபர கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.