இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! தாய்க்காக மகளின் உருக்கமான தியாகம்

Report Print Vethu Vethu in சமூகம்

காலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக பட்டாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவரே இவ்வாறு மரக்கறி விற்பனை செய்து வருகின்றார்.

நிலந்தி விக்ரமசிங்க என்ற பெயருடைய அவர் எல்பிட்டிய ஆனந்த வித்தியாலயத்தில் உயர் தரத்தில் சிறந்த முறையில் சித்தியடைந்து களனி பல்கலைக்கழத்தில் படிப்பை தொடரும் வாய்ப்பை பெற்றார்.

நிலந்தியின் சிறு வயதில் நாட்டில் நிலவிய யுத்த நிலை காரணமாக அவரது தந்தை காணாமல் போயுள்ளார். இந்நிலையில், கடுமையான சிமரத்திற்கு மத்தியில் தாய் அவரை படிக்க வைத்துள்ளார். அவர் விசேட பட்டம் பெற்ற பட்டதாரி என்ற போதிலும், இதுவரை அவருக்கு நல்லதொரு தொழிலும் கிடைக்கவில்லை.

தாய் உடல் நலமற்ற நிலையில் உள்ளமையினால் அவரை தனியாக விட்டுவிட்டு தூர பிரதேசத்தில் தொழில் தேடி செல்ல முடியவில்லை. இதனால் அவர் மரக்கறி விற்பனை செய்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

தன்னுடன் படித்தவர்களுக்கு தங்கள் ஊரில் நல்ல வேலைகள் கிடைத்த போதிலும் தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கிடைக்கும் வருமானத்தில் தாயை பாதுகாத்து வாழ்ந்து வருகின்றார்.

நிலந்தியின் செயற்பாடு குறித்து அந்தப் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.