திடீரென வந்து அதிர்ச்சி கொடுத்த பாரிய மலைப்பாம்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

காட்டில் இருந்து கோழி கூட்டுக்குள் புகுந்து பாரிய மலைப்பாம்பு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீகஹக்கிவுல பிரதேசத்தில் உள்ள கோழி கூட்டுக்குள் புகுந்த பாரிய அளவிலான மலை பாம்பு ஒன்று 10 கோழிகளை விழுங்கியுள்ளது.

விழுங்கிய பின்னர் பாம்பு மீண்டும், காட்டிற்கு செல்ல முடியாமல் அங்கேயே தடுமாறியுள்ளது.

விழுங்கிய 10 கோழிகளில் 9 கோழிகளை சிறிது நேரத்தின் பின்னர் பாம்பு வாந்தி எடுத்துள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் பாம்பை பிடித்து வனவிங்கு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.