மடு தேக்கம் கிராமத்து மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி

Report Print Ashik in சமூகம்

கடந்த சில தினங்களுக்கு முன் மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு பலனாக மாணவர்களின் நலன் கருதி இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் பேருந்து ஒன்று இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.எம்.சீலனின் முயற்சியினாலும், மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முயற்சியினாலும் குறித்த பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மன்னார் - மதவாச்சி பிரதான வீதி மாதா கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் பேருந்தை இடை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தேக்கம் கிராம மாணவர்கள் தமக்கு உரிய முறையில் பேருந்து சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் இதனால் தாம் தாமதித்தே பாடசாலைக்கு செல்வதாகவும் கூறி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பலனாக குறித்த பேருந்து இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Latest Offers