இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் அமைந்துள்ள மதுசா முன்பள்ளியில் இராணுவத்தினரால் அமைக்கப் பெற்ற சிறுவர் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் 68ஆவது படைப்பிரிவு மற்றும் 683ஆவது படைப்பிரிவு, 7ஆவது கெமுனுபடைப்பிரிவு இணைந்து முல்லைத்தீவு தேராவில் பகுதியில் குறித்த சிறுவர் பூங்காவினை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுவர் பூங்காவினை திறந்து முன்பள்ளி நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று சமாதான நீதவான் ஐ.மாதவராஜா முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

இதில் 68ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஆர்.என்.பெர்னாண்டோ விசேட அதிதியாக கலந்து கொண்டு பூங்காவினை திறந்து வைத்துள்ளார்.

இதில் சிறார்கள் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.