தங்கத்தின் ரூபத்தில் வரும் ஆபத்து! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் போலியாக தயாரிக்கப்பட்ட தங்க நிற பந்து விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உண்மையான தங்கம் என கூறி இந்த பந்தினை மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

களுத்துறை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் 450 போலி தங்கப் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றினை 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோசடி நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இது குறித்து நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.