மன்னார் இராணுவத்தினரால் 5000 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

Report Print Ashik in சமூகம்

இலங்கை இராணுவத்தின் 69வது ஆண்டு பூர்த்தியை மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் மரக் கன்றுகளை நாட்டி வைத்துள்ளனர்.

மன்னார், பேசாலை புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் ஒரு தொகுதி பயன் தரும் மரக்கன்றுகளை இன்று காலை 9 மணியளவில் இராணுவத்தினர் நாட்டி வைத்துள்ளனர்.

இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு கேணல் ஜோச் ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இம் மரம் நாட்டு வைபவத்தில் பேசாலை இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் சுரேஸ் உட்பட பேசாலை உதவிப் பங்குத்தந்தை மற்றும் குறித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers