வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கான அறிவித்தல்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நண்பகல் முதல் 17 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தல முதல் ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுலாகிறது.

கொழும்பு 5, 7, 8 ஆகிய பகுதிகளுக்கு இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வெள்ளவத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகள், பொரலஸ்கமுவ, மஹரகம நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.