துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவனெல்லை இணை அமைப்பாளர் இம்தியாஸ் காதர் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், இன்று கேகாலை நீதவான் சாமர விக்ரமநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இம்தியாஸ் காதர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் நேற்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

விசேட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் துப்பாக்கிகளை இவர் அனுமதிப்பத்திரம் இன்றி வீட்டில் வைத்திருந்ததாக தெரியவருகிறது.

அதேவேளை இம்தியாஸ் காதருடன் தொடர்புகளை வைத்திருந்த நபர் ஒருவர் தொடர்பிலும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.