மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிரதேச சபை உறுப்பினர்

Report Print Steephen Steephen in சமூகம்

14 வயதான பாடசாலை மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மாத்தளை - உக்குவளை பிரதேச சபை உறுப்பினரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 14 ஆம் திகதி உக்குவளை கந்தேமட பிரதேசத்தில் 36 வயதான சந்தேக நபர், மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து, பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

Latest Offers