மூதூர் வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டத்தினால் மக்கள் பாதிப்பு

Report Print Mubarak in சமூகம்

மூதூரில் பிரதான வீதி உட்பட பல வீதிகளில் கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமைக் காரணமாக விபத்துக்கள், போக்குவரத்து இடைஞ்சல் மற்றும் வீதிகள் அசுத்தமாக்கபடுவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ் விடயம் குறித்து மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸிடம் இன்று வினாவிய போது தெரிவித்துள்ளதாவது,

“கட்டாக்காலி மாடுகள் வீதிகளில் இனிமேலும் திரிவதைக் கண்டால் மாடுகள் சபையினால் கைப்பற்றப்பட்டு உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதஸ்தல ஒலிபெருக்கிகளிலும் மற்றும் பொது இடங்களிலும் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பிரதான வீதி மற்றும் பல முக்கிய வீதிகளில் பகல், இரவு பாராது கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதினாலும், வீதிகளில் கூட்டமாக இருப்பதினாலும் தொடர்ச்சியாக அசௌகரியங்கள் ஏற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers