பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்! மறைக்க முயற்சித்த போதும் அம்பலம்

Report Print Vethu Vethu in சமூகம்

குளியாப்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வகுப்பறையில் வேறு ஆசிரியர் கற்பித்து கொண்டிருந்த போது மற்றுமொரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதன் போது மாணவன் மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியர் நடத்தும் மேலதிக வகுப்பில் கலந்து கொள்ளாமையினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர் மாணவனை குளியாப்பிட்டிய நகரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் மாணவனின் சகோதரன் குளியாப்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் ஊடகங்களுக்கு தெரியாமல் இருக்கு குறித்த ஆசிரியர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், நண்பர்களுக்கும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers