விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை, ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம்! ஏழு பேர் விடுதலை

Report Print Murali Murali in சமூகம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்வபம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கடந்த ஜூன் மாதம், விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை, கிளைமோர் போன்றன கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த, 19 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றினால் நேற்று விடுதைலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஏனைய 12 பேரையும், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers