நாலக்க டி சில்வாவிடம் இன்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் 9 மணிநேர விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்

பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று சுமார் 9 மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாலக்க டி சில்வாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைய, நேற்றைய தினம் முதலாவது நாளாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவரிடம் 9 மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers