யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கொக்குவில் – கோண்டாவில் பகுதிகளில் அண்மைக் காலமாக வழிப்பறிக் கொள்ளைகள் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுக்கு அமைவாகவே விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இருவரையும் கைதுசெய்ததுடன், இருவரையும் யாழ். நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.