சோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை

Report Print Mubarak in சமூகம்

சோளத்தின் உத்தரவாத விலையினை உறுதிப்படுத்த விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் உள்ளூரில் சோள உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ சோளத்தின் விலை 43 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சோள உற்பத்திக்காக விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 50 வீதத்தை செலவிடுகின்றனர்.

ஏற்கனவே சோள விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு அதிக உற்பத்தியை வழங்கக் கூடிய முறைமை குறித்து விவசாய திணைக்கள அதிகாரிகள் விசேட திட்டங்களை முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.