மேலதிக நேரக்கொடுப்பனவு கோரி முல்லைத்தீவில் வைத்தியர்கள் போராட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கான மேலதிக நேர கொடுப்பனவினை வழங்கக்கோரி வைத்தியசாலையின், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஆகியோர் குறித்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலையின் முன்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், 45 வரையான வைத்தியர்களும், 74 வரையான தாதியர்களும், 14 வரையான துணை வைத்திய சேவையாளர்களும் கடமையாற்றி வருவதாகவும், இவர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு மாகாணசபையினால் ஒதுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.