முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் விபத்தில் படுகாயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா இரண்டாம் குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து இரண்டாம் குறுக்கு வீதியூடாக பயணித்த வான் மீது சூசைப்பிள்ளையார் குளம் வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers