வலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்! மகிழ்ச்சியில் முல்லைத்தீவு மீனவர்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று வலைகளில் ஏராளமான கூரை மீன்கள் சிக்கியுள்ளதால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கூரை மீனொன்று சராசரியாக 5 கிலோகிராம் எடையை கொண்டிருக்கும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக ஆழ்கடலில் சட்டவிரோத மீன்பிடி தொழில் அதிகரித்திருந்தமையினால் பாரை மற்றும் கூரை மீன்கள் சூரையாடப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் கரைவலை மீனவர்களின் கடற்டதொழில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் சட்டவிரோத கடற்தொழிலை முற்றாக தடைசெய்ய கோரி முல்லைத்தீவு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் சட்டவிரோத கடற்தொழில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீண்டகாலமாக கரையோர மீனவர்களின் வலைகளில் சிக்காத பெரிய மீன்கள் இன்று சிக்கியுள்ளதால் மீனவர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் 5 பகுதி கரைவலை மீனவர்களின் வலைகளில் இன்று காலை சுமார் 500 கிலோகிராம் கூரை உள்ளிட்ட பெரிய மீன்கள் சிக்கியுள்ளதாக மீன் சந்தைப்படுத்தும் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.