ஐரோப்பா செல்ல முற்பட்ட இளம் பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை!

Report Print Vethu Vethu in சமூகம்

ஐரோப்பா செல்ல விசா பெற்றுத் தருவதாக பல பெண்களை ஏமாற்றிய குப்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இத்தாலிக்கு செல்வதற்காக விசா பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களை திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யும் கும்பல் ஒன்றை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹவெவ, தொடுவாவ பிரதேசத்தில் இளைஞன் ஒருவரினால் பொலிஸ் விசேட விசாரணை பிரிவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கும்பலில் இளைஞர்கள் 3 பேரும் இளம் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், பிங்கிரிய, நாத்தன்டிய மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களினால் பயன்படுத்தப்பட்ட வாடகை அடிப்படையிலான மோட்டார் வாகனமும் அவர்களிடம் இருந்த போலி திருமண சான்றிதழ் மற்றும் போலி விசாக்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மஹவெவ, தொடுவாவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இத்தாலி விசா வழங்குவதாக கூறி பெண் ஒருவர் அவரை திருமணம் செய்துள்ளார்.

அதனுடன் அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளனர்.

கொடுக்கல் வாங்கல்களின் முழுமையான பெறுமதி 8 லட்சம் ரூபாயாகும். இதற்காக தற்போது இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தொடர்புப்பட்டுள்ளார்.

பின்னர் இந்த மோசடிக்கு தொடர்புடைய இன்னும் ஒருவரினால் பணம் வழங்கப்பட்ட இளைஞனுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. எனினும் அது போலி விசா என உறுதியாகியுள்ளது.

மேதிக பணமான 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ள வந்த போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்த பெண்ணுடன், ஏமாற்றப்பட்ட இளைஞன் வெளிநாடு செல்ல எதிர்பார்த்த போதிலும் அந்த பெண் மோசடி கும்பலின் உறுப்பினர் என பின்னரே தெரியவந்துள்ளது.

கும்பலின் பிரதான சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.