இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போகாவத்தை மற்றும் கெலிவத்த தோட்ட தொழிலாளர்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலையக அரசியல் தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போகாவத்தை மற்றும் கெலிவத்த தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

தலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதியின், கெலிவத்தை சந்தியில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளதுடன், பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தொழிலாளர்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் தோட்ட அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.