மாத்தறையில் துப்பாக்கிச் சூடு! இருவர் படுகாயம்

Report Print Manju in சமூகம்

மாத்தறை - ரொட்டும்ப கிராமிய வங்கிக்கு முன்னால் இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு இன்றி காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய மற்றும் மாரவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.